வழிபாட்டுத்தலங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை படிப்படியாக தடை செய்ய வேண்டுமென வலியுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்லாது, நாட்டின் கரையோரப் பகுதிகளிலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு படிப்படியாக தடை செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை மீள்-சுழற்சி செய்வதன் மூலம் புதிய உற்பத்திகளை உருவாக்குதலானது, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கான புதிய ஆரம்பமாக இருக்கும் எனவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.