இந்தியா - குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வட, கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நீடித்து வருகிறது.
இப்போராட்டங்களால் இம்மாநிலங்களில் 106 ரயில் சேவைகளும் 9 விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் வன்முறைகள் பெரிதாக வெடித்துள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பலியானதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை அசாம், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குவஹாத்தியில் உள்ளூர் தொலைக்காட்சி அலுவலகத்துள் நுழைத்து துணை இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் போராட்டக்காரர்கள் ஆளும் அரச கட்சியான பாஜக அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டு, சூறையாடப்படுகிறது எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.