சஜித் தோல்வி அடைந்தமைக்கு இதுதான் காரணமா? – அமைச்சர் பந்துலவின் கண்டுபிடிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, December 18, 2019

சஜித் தோல்வி அடைந்தமைக்கு இதுதான் காரணமா? – அமைச்சர் பந்துலவின் கண்டுபிடிப்பு



வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாலம்பே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


அத்துடன் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்பதை கர்தினாலும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இதனை உணராமல் இலங்கை தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல என சஜித் பிரேமதாச தெரிவித்தமையே அவரின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது