சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, December 18, 2019

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை



படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கையர்களைத் தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சு வித்தியாசமான விளம்பர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் அடங்கிய சுவரொட்டிகள் குறித்து  BUZZFEED.COM என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

புகலிடம் கோரும் இலங்கையர்களைத் தடுத்து நிறுத்த ஜோதிடத்தை பயன்படுத்தி , இந்த வித்தியாசமான விளம்பர யுக்தியை அவுஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது.

இந்த விளம்பரங்களில் ஒவ்வொரு ராசிகள் இடம்பெற்றுள்ளன. ராசிக்காரர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய வர முனைந்தால் இது தான் நடக்குமென எதிர்வுகூரும் வாசகங்கள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜாதகத்தில் தோஷத்துடன் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வரும் இலங்கையர்களுக்கு குடும்பப் பிரச்சனை ஏற்படலாம், குற்ற உணர்வு தலைதூக்கலாம், வாழ்க்கை முழுதும் கடன் சுமையால் அவதிப்படலாம் என்றெல்லாம் பல்வேறு தொல்லைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆட்கள் புகலிடம் கோருவதற்காக அவுஸ்திரேலியாவிற்கு வருகை தரும் நாடுகளை இலக்காக வைத்து, அவுஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மட்டத்திலான விளம்பரத் திட்டங்களை அமுலாக்கி வருகிறது. சுவரொட்டிகள், பதாதைகள், காணொளிகள் முதலானவற்றின் மூலம் இந்த விளம்பர யுக்தி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.