சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து வருபவருமான முன்னாள் அமைச்சர் பௌசி, இன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தன்னை சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கியமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்தமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரியே பௌசி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக மைத்திரிபால சிறிசேன தயாசிநி தயசேக்கர மகிந்த அமரவீர மகிந்த தேசப்பிரிய உள்ளிட்ட 12 பேர் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.