வலிந்து காணாமல் ஆக்குதலில் இலங்கை படைகளுடன் இணைந்து செயற்பட்டிருந்ததாக பகிரங்கமாக குற்றஞ்சுமத்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தா காணாமல்போன உறவுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க களமிறங்கவுள்ளாராம்.அவர்களின் உறவுகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு குறித்த விடயத்தினை அரசின் கவனத்து கொண்டு செல்ல இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுற்றுப்பயணங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 27ம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திலும்,29ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திலும்,31ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்திலும், அன்றைய தினமே நண்பகல் வவுனியாவிலும் சந்திக்கவுள்ளதாக அவரது கட்சி அறிவித்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பகிரங்கமாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் ஈபிடிபியும் காணாமல் ஆக்குதலில் படைகளுடன் இணைந்து தொடர்புபட்டிருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.