பதவியை விட மக்களின் அன்பே பெறுமதியானது – சஜித் பிரேமதாச - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 31, 2019

பதவியை விட மக்களின் அன்பே பெறுமதியானது – சஜித் பிரேமதாச

பதவியை விட மக்களின் அன்பு மற்றும் வரவேற்பே தனக்கு பெறுமதியானது என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


இரத்மலான பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பதவிக்கு ஆசைப்பட்டு சண்டை போட்டு கட்சியை பிளவுபடுத்த நாங்கள் எவ்விதத்திலும் முயற்சி செய்வதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் அன்பு என்பது ஜனாதிபதி பதவியை விட பெறுமதி வாய்ந்த பதவி, அதனால் நாங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் மக்களுக்காக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.