கொழும்பு வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இன்று காலை அதன் அளவு 100 -150 இற்கு இடையில் காணப்பட்டதாக நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்தார்.
இந்த நிலையில் இது தொடர்பில் சிறுவர்களும் சுவாச பாதிப்புக்களை கொண்டுள்ளவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் புதிய வருட பிறப்பை கொண்டாடும் வகையில் பட்டாசுகளை கொளுத்துவதன் மூலம் வளிமண்டலத்தின் தரம் பாதிக்கப்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது