தூதரக ஊழியர் கடத்தல்; அரசை இழிவுபடுத்த செய்யப்பட்டது - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, December 12, 2019

தூதரக ஊழியர் கடத்தல்; அரசை இழிவுபடுத்த செய்யப்பட்டது

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படுவது அரசை இழிவுபடுத்தச் செய்யப்பட்டது என நாம் கருதுகிறோம்.

இவ்வாறு இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

மேலும்,

நாங்கள் அனைவரும் நண்பர்கள் மற்றும் எதிரிகள் அல்லாதவர்கள். விசாரணை வெளிப்படையாக முன்னெடுக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார். இது அரசை இழிவுபடுத்தச் செய்யப்பட்டது என நாம் கருதுகிறோம் - என்றார்.