யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மணல் அகழ்வினால், சுற்றுச் சூழல் பெருமளவில் பாதிக்கப்படுவதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும்,
ஜனாதிபதி தேர்தல் முடிந்ததன் பின்னர் கிரவல் மற்றும் மணல் கொண்டு செல்வதற்கு அனுமதி பெற வேண்டிய அனுமதி நிறுத்தப்பட்டு அனுமதியின்றி அவற்றை கொண்டு செல்ல அனுமதித்த பின்னர் தற்பொழுது எங்கு எங்கெல்லாம் மணல் அள்ளக்கூடாது என்று இருந்ததோ அந்த இடங்களில் எல்லாம் தற்போது மண் அகழ்வு மிகவும் சுதந்திரமாக இடம்பெற்று வருகின்றமை வருத்தமளிக்கிறது.
எனவே சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பது குறித்து ஜனாதிபதி உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் - என்றார்.