மஸ்தான் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, December 29, 2019

மஸ்தான் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது பாதுகாவலர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பாவக்குளம் பகுதியில் மக்கள் சந்திப்புக்களை முடித்து வவுனியா நோக்கி பயணித்தவேளை, அப்பகுதியில் நின்ற சிலர் வாள்களால் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது சுதாகரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் தாக்குதல் முயற்சியை தடுக்க முற்பட்டபோது பாதுகாவலரின் கைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்க முற்பட்டவர்கள் தப்பியோடிய நிலையில், காயமடைந்த பாதுகாவலர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்