அடிப்படைவாதத்தை ஏற்படுத்துவதற்காக மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்- மஹிந்த - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 27, 2019

அடிப்படைவாதத்தை ஏற்படுத்துவதற்காக மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்- மஹிந்த

அடிப்படைவாதத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் சிங்கள- பௌத்த மக்களை சீர்குலைப்பதற்காகவும், அனைத்தின மக்களின் குடும்ப நிலைமைகளை பாதிப்படையச் செய்து பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையில் காணப்படும் உறவையும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் காணப்படும் தொடர்பினையும், பிள்ளைகள் மதங்களுடன் கொண்டுள்ள தொடர்பினையும் சீர்குழைப்பதற்காக எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

அத்துடன் மாணவர்களின் பாடப்புத்தங்களில் சமூகங்களிடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையில்  பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்படுமாயின் அவர்களுக்கு  எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அடிப்படைவாதத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

இன்று பௌத்த அறநெறிகளில் கல்வி கற்றுவரும் பிள்ளைகள்தான் நாளை பௌத்த சமயத்தை அடையாளப்படுத்தப் போகின்றனர்.

சிங்கள- பௌத்த கலாசாரம் தொடர்பாக இவர்கள் விகாரைகளினூடாகவே கற்றுக் கொள்கின்றனர். இதேபோல் நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பாக பாடசாலை கல்வியினூடாகவே மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.

மேலும் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற பாடப்புத்தகங்களிலும் அவர்களின் மனதை பாதிக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பல தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில பாடப்புத்தகங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் ஒரு மாகாணமாக காட்டப்பட்டுள்ளதாகவும் சிங்கள புத்தாண்டு தொடர்பான படங்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது” என தெரிவித்தார்.