திருகோணமலை, மஹதிவுல்வெவ கிராமத்தில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தந்தைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தராதர சாதாரண தர பரீட்சைக்கு சென்ற டபிள்யூ. சுபுன் தனஞ்ச என்ற மாணவன் தொடர்ப்பான செய்தி இன்று வெளியாகியது.
நீண்ட காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவனின் தந்தை நேற்றைய தினம் உயிரிழந்தார்.
தனஞ்ச என்ற மாணவன் இன்று நாடு முழுவதும் ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரிட்சை நடைபெறும் நிலையில் இறந்த தந்தையிடம் மாணவன் இறுதி அஞ்சலியை செலுத்தி விட்டு சென்றதை எமது செய்தியாளரின் கமராவில் காணக் கிடைத்தது.
பிரதேசத்தில் இச்சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியிருந்ததை காணக்கூடியதாகவுள்ளது.