அடுப்பில் இருந்த சோற்றுப்பானை வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு – யாழில் துயர சம்பவம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 31, 2019

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு – யாழில் துயர சம்பவம்!

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானியம் தோடடத்தை சேர்ந்த யசிந்தன் கஜலக்சி (வயது 2) என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மணியம் தோடடத்தில் வசித்து வரும் குறித்த குழந்தையின் வீட்டில் அவரது தாயார் கடந்த 23 ஆம் திகதி நிலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பில் சோறு சமைத்துள்ளார்.

 அப்போது அடுப்புக்கு அண்மையில் இந்த குழந்தையும் இருந்துள்ளது. குழந்தை எதிர்பாராத விதமாக அடிப்பினை காலால் உதைந்துள்ளது. இதனால் அடுப்பில் கொதி நிலையில் இருந்த சோற்றுப் பானை குழந்தை மீது வீழந்துள்ளது. இதனால் குழந்தையின் உடம்பு முழுவதும் சூடு காயம் ஏற்பட்டுள்ளது.காயமடைந்த குழந்தையை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.