வத்தளையில் விபச்சார விடுதியை நடத்திய பிரபல இளம் பெண்ணை திட்டம் போட்டு தூக்கிய பொலிஸார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, December 8, 2019

வத்தளையில் விபச்சார விடுதியை நடத்திய பிரபல இளம் பெண்ணை திட்டம் போட்டு தூக்கிய பொலிஸார்!


யூடியுப்பில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டும், அழகு நிலையம் நடத்தியும் பிரபலமடைந்த இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். அழகு நிலையம் என்ற பெயரில் அவர் விபச்சார விடுதி நடத்தியபோதே சிக்கினார்.

வத்தளை, ஹெந்தலவில் அவரது அழகு நிலையம் நடத்தினார்.

பாணந்துறை, வலான பொலிஸ் நிலையத்தின் வலான பொலிஸார் அவரை பொறி வைத்துப் பிடித்தனர்.

இது குறித்து சிங்கள ஊடகங்களில் வெளியான செய்தியில்,

அழகு நிலையம் நடத்தியதுடன், ஏடாகூட யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். பேஸ்புக்கிலும் அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.

அவரது வீடியோக்களை பார்க்க பெருமளவானவர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்தன. ஷர்மி குமார் என்ற புனைபெயருடன் அவர் சமூக ஊடகங்களில் பிரபலமாக இருந்தார்.


ஷர்மி குமார் என சமூக வலைத்தளங்களில் அறியப்பட்டாலும், அவரது உண்மையான பெயர் ரத்னகுமார் ஷாமிலா. வத்தளை ஹெந்தலவை சேர்ந்தவர்.

திருமணமாகி குழந்தை பிரசவித்ததும், விவாகரத்து செய்த பின்னர், அழகு நிறுவனமொன்றை ஆரம்பித்திருந்தார். எனினும், அதில் வருமானம் போதாது என, அழகு நிலையத்தின் பெயரில் விபச்சார நிலையம் நடத்த ஆரம்பித்துள்ளார். இந்த தொழிலில் பெரும் வருமானம் வர தொடங்கியதும், பல வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார்.


தனது தொழிலை பிரபலப்படுத்த பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அனேகமானவை  வயது வந்தவர்களிற்கான வீடியோக்களாக இருந்ததால், பொலிசாரின் கவனத்தை அது ஈர்த்தது.

பொலிசார் நடத்திய விசாரணையில் அவரது அழகு நிலையத்தில் சட்டவிரோத பாலியல் தொழில் நடப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, பொலிஸ் இரகசிய உளவாளிகள், வாடிக்கையாளர்களை போல அவரை தொடர்பு கொண்டு, தமக்கு இரண்டு பெண்கள் தேவையென கேட்டுள்ளனர். ஒருவரிற்கான கட்டணம் 30,000 ரூபா. தாம் வரும் நாள், நேரத்தை முன்பதிவு செய்துகொண்டனர் உளவாளிகள்.


சம்பவ தினத்தில் வத்தளையிலுள்ள ஷம்மி குமாரின் அழகு நிலைய வரவேற்புரைக்கு இரண்டு உளவாளிகளும் சென்றனர். ஷம்மி குமார் அவர்களை அன்புடன் வரவேற்றாள். பின்னர் அவர் இரண்டு இளம்பெண்களை சுட்டிக்காட்டி பணத்தை எடுத்துக் கொண்டார்.

அதே நேரத்தில், அங்கு நுழைந்த பொலிசார், ஷம்மி குமார் மற்றும் இரண்டு யுவதிகளை கைது செய்தனர். ஷம்மி குமாரும், இரண்டு யுவதிகளும் தப்பிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதில் ஒரு யுவதி நச்சு திரவம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். எனினும், பொலிசார் சமயோசியமாக அதை தடுத்து விட்டனர்.

நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.