இன்றும் முன் மாதிரியாக பெண் போராளிகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, December 8, 2019

இன்றும் முன் மாதிரியாக பெண் போராளிகள்!

போராட்டகாலத்திலும் சரி அதன் பின்னரான காலப்பகுதியிலும் தங்களை முன்மாதிரியாக நீரூபிக்க விடுதலைப்புலிகள் போராளிகள் தவறுவதில்லை. போரில் இரு கண்களையும். ஓர் கையும் இழந்து இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டுவந்து கல்விகற்று யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான அகமொழி மற்றும். சந்திரமதி ஆகிய இருவரும் பட்டம் பெற்றுள்ளனர்.
இறுதி யுத்ததில் படுகாயமடைந்து வைத்தியசாலை பின்னர் புனர்வாழ்வு முகாமென அலைக்கழிக்கப்பட்டு இறுதியில் தடைப்பட்ட தமது பல்கலைக்கழக பட்டக்கற்கையினை பூரணப்படுத்தி அவர்கள் அனைவரதும் பாராட்டுக்களுடன் வெளியேறியுள்ளனர்.
இதனிடையே விசேட தேவையுடைய மேலும் சிலரும் தமது கல்வியை பூரணப்படுத்தி தமது பட்டத்தை இம்முறை தமதாக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.