ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் – ஜனவரியில் ஐ.தே.க. மீள் ஒருங்கிணைப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, December 18, 2019

ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் – ஜனவரியில் ஐ.தே.க. மீள் ஒருங்கிணைப்பு



2020 ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறியமுடிகின்றது. எனவே, நாம் கட்சியின் மீள் ஒருங்கிணைப்புப் பணிகளை ஜனவரி மாத முற்பகுதியில் ஆரம்பித்து, பெப்ரவரி மாத இறுதியில் நிறைவுக்குக் கொண்டுவர வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் அது பற்றி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஐக்கிய தேசியக் கட்சிக்கு என்று எதிர்காலம் ஒன்று உண்டு. அனைவரும் அந்த எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை வையுங்கள். அதனை நோக்கிய பயணத்துக்கு முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதே எனது பொறுப்பாகும்” – என்றார்.