மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார் ஜனாதிபதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 15, 2019

மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார் ஜனாதிபதி!

மக்களுடன் மக்களாக நின்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஜனநாயக கடமையை இன்று (சனிக்கிழமை) நிறைவேற்றியுள்ளார்.

பொலன்னறுவை, புதிய நகரம், ஸ்ரீ வித்தாலோக்க விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில், தனது வாக்கினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிவு செய்துள்ளார்.

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலின் வாக்களிப்பு, நாடு முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அனைத்து பகுதிகளிலுள்ள மக்களும் தங்களது வாக்கினை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.