கண்டி கலஹா- குருகேளேவத்த மில்லவ தோட்டத்தில் இன்று மாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்திலுள்ள குடியிருப்பு தொகுதி மீதே இனந்தெரியாத குழுவினரால் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் கூறியுள்ளது.
இலக்கத்தகடு மூடப்பட்ட ஜீவ் வண்டியில் வந்த குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது.
தாக்குதல் நடத்திய கும்பல், நாளை வாக்களிக்க செல்ல வேண்டாம் என்றும் மிரட்டியதாக கலஹா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.