தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், திருகோணமலையில் வாக்களித்திருந்தார்.
புனித மரியாள் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில், இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.