புத்தர் சிலை உடைப்பு– சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, November 14, 2019

புத்தர் சிலை உடைப்பு– சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


கண்டி – மாவனெல்லை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலைகளை உடைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை இன்று (வியாழக்கிழமை) மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் கண்டி, மாவனெல்லை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகள் இனந்தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.