யாழ். பல்கலையைவிட்டு அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு.? - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, November 27, 2019

யாழ். பல்கலையைவிட்டு அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு.?

வட தமிழீழம் , யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது.
அதற்கமைய அவர்களை இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியுடன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப் பீட மாணவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டது.
எனினும் அவர்கள் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையையும் மீறி ஏற்கனவே ஏற்பாடு செய்ததற்கு அமைய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்று பிற்பகல் 2 மணியுடன் மூடப்படுவதாகவும் அனைத்து உத்தியோகத்தர்களையும் வெளியேறுமாறும் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி பணித்துள்ளார்.