வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் மாவீரர் நினைவஞ்சலி இடம்பெற்றது.
இன்று பகல் எல்லங்குளம் துயிலுமில்லத்தில் தற்போது இராணுவ முகாம் அமைந்துள்ளது. பழைய துயிலுமில்லத்தின் முன்பாக சிவாஜிலிங்கம் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற ஆயத்தமானபோது, இராணுவத்தினரும் பொலிசாரும் அதை தடுத்தனர்.
அந்த இடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டாமென இராணுவத்தினர் தடைவிதித்தனர். இதையடுத்து சற்று தள்ளி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்தும் விதமாக இராணுவத்தினர் புகைப்படம் எடுத்தனர்.