கோத்தாவை தோற்கடிக்கவே சஜித்திற்கு ஆதரவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 6, 2019

கோத்தாவை தோற்கடிக்கவே சஜித்திற்கு ஆதரவு!

சஜித்திற்கு ஆதரவளிப்பதென்ற எங்களுடைய தீர்மானம் இந்த இரண்டு பிரதான வேட்பாளர்களை நாங்கள் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களிலே யார் தோற்க வேண்டும் என்பதனை அடிப்படையாக வைத்து எடுத்த தீர்மானமே தவிர மற்றவரோடு நாங்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்ததற்காக எடுத்த தீர்மானம் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இருவரிலே எவர் சிறந்தவர் அல்லது எவர் வெற்றி பெறக்கூடாது என்று எடுக்கப்பட்ட தீர்மானம். நாங்கள் வைத்த கோரிக்கைகளுக்கு சரியான முறையில் திருப்திகரமான பதில் கொடுத்தார் என்பதன் அடிப்படையிலே அத்தீர்மானத்தை எடுக்கவில்லை.

மேலும் மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற பல்வேறு குறைபாடுகள் சம்மந்தமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பல விடயங்களை செய்ய முடியாமல் இருக்கின்றது என்பதற்கான காரணங்களை வினவிய விடயங்கள், எதிர் காலத்தில் தமிழ் மக்களின் உரிமை சார் விடயங்கள் தொடர்பில் அவர்களின் இருப்பு, அபிவிருத்தி சம்மந்தமான விடயங்களையும் தொடர்பில் முன்னெடுப்பது தொடர்பாகவும் பல்வேறு விதமான கேள்விகள் எழுப்பப்பட்டது எனவும் எம்.ஏ.சுமந்திரன்; தெரிவித்துள்ளார்.

இதனிடையே முன்னாள் மாகாண சபை அமைச்சரான பா.டெனிஸ்வரன் டெலோவிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளார்.