நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நீதிமன்றங்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர் என அனைத்துத் தரப்பினருக்கும் கௌரவத்தை வழங்கும் வகையிலேயே நாம் செயற்படுவோம்.
அடுத்த அடுத்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சோ அல்லது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சோ வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொறுப்பு வந்தவுடன், நான் மக்களுக்காகவே முழுமையாக செயற்படுவேன். இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க நாம் இடமளிக்கப்போவதில்லை.
இதற்கான அனைத்து செயற்பாடுகளையும் நாம் மேற்கொள்வோம். அத்தோடு, போதைப்பொருள் வர்த்தகத்தையும் 2 மாதங்களில் கட்டுப்படுத்துவோம்.
2 வருடங்களில் இலங்கையிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக அழித்தொழிப்போம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.