தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மாவீரர் நாள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 27, 2019

தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மாவீரர் நாள்!

தமிழ் மக்களின் விடிவிற்காக உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை இன்று உலகத்தமிழினம் உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்தது.
தமிழர் தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்கள் இலங்கை நேரம் மாலை 6.05 மணிக்கு கூட்டாக மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.
6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, மாவீரர்கீதம் ஒலிக்க, பொதுச்சுடரேற்றப்பட, அஞ்சலிக்காக கூடியிருந்த மக்கள் நினைவுச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் தாயகத்தில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டபோதிலும், எல்லா தடைகளையும் கடந்து, தாயகத்தின் அனைத்து துயிலுமில்லங்களிலும், அவற்றின் அருகிலும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள எல்லங்குளம், கோப்பாய், கொடிகாமம் துயிலுமில்லங்களின் அருகில் காலையில் அஞ்சலி நிகழ்வுகள் நடந்தன.
யாழ்ப்பாணத்தில் கோப்பாய் துயிலுமில்லத்தின் அருகிலும், வல்வெட்டித்துறை தீருவில் பூங்காவிலும் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிளிநொச்சியில் கனகபுரம் துயிலுமில்லம், முல்லைத்தீவில் விசுவமடு மாவீரர் துயிலுமில்லம், வவுனியாவில் நகரசபை மண்டபம், ஈச்சங்குளம் துயிலுமில்லம், வன்னி விளாங்குளம், மட்டக்களப்பில் மாவடி முன்மாரி துயிலுமில்லம், திருகோணமலை சம்பூர் துயிலமில்லம் உள்ளிட்ட பல இடங்களில் நினைவஞ்சலிகள் நடந்தன.
கோப்பாய் துயிலுமில்லம்- யாழ்ப்பாணம்
விசுவமடு துயிலுமில்லம்
எள்ளங்குளம் துயிலுமில்லம்- வடமராட்சி
மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் சக்கர நாக்காலியில் வந்து பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.
மாவடி முன்மாரி துயிலுமில்லம்- மட்டக்களப்பு
இரண்டு மாவீரர்களின் தாயாரான சாந்தலிங்கம் சின்னப்பிள்ளை பொதுச்சுடரேற்றினார்
வாகரை கண்டலடி துயிலுமில்லம்- மட்டக்களப்பு
நான்கு மாவீரர்களின் தாயார் வேலன் தங்கம்மா என்ற தாயினால் சுடரேற்றப்பட்டது
வன்னி விளாங்குளம் துயிலுமில்லம்
ஈச்சங்குளம் துயிலுமில்லம்- வவுனியா
3 மாவீரர்களின் தந்தை எஸ்.யேசுதாஸ் பொதுச்சுடரை ஏற்றினார்
கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லம்
பொதுச்சுடரை 4 மாவீரர்களின் தந்தை வைத்திலிங்கம் சண்முகம் ஏற்றி வைத்தார்.
யாழ் பல்கலைகழகம்
கொடிகாமம்- யாழ்
மடு பண்டிவிரிச்சான் துயிலுமில்லம்
மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம்
மூன்று மாவீரர்களின் தந்தையான பொண்ணுச்சாமி ராமநாதன் பொதுச் சுடர் ஏற்றினார்
கிளிநொச்சி முழங்காலில்  மாவீரர் துயிலும் இல்லம்
களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்