கொட்டும் மழைக்கு நடுவிலும் தென்தமிழீழத்தில் எழுச்சியுடன் மாவீரர்நாள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 27, 2019

கொட்டும் மழைக்கு நடுவிலும் தென்தமிழீழத்தில் எழுச்சியுடன் மாவீரர்நாள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டும் மழையிலும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு, படுவான்கரையில் உள்ள மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியதேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு கொட்டும் மழையிலும் நடைபெற்றுள்ளது.
பிரதான ஈகைச்சுடர் மாவீரர் ஒருவரின் தாயாரினால் ஏற்றப்பட்டு பின்னர் உயிர் நீர்த்த மாவீரர்களின் உறவுகளினால் ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.