ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமைக்குழு ஒன்றை நியமிக்க ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் இந்த குழு நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு பேரைக் கொண்டதாக இந்த தலைமைத்துவ குழு இருக்கும். சஜித் பிரேமதாச, ஹரின் பெர்னாண்டோ, அகிலவிராஜ் காரியவசம், நவீன் திசநாயக்க ஆகியோர் குழுவில் அங்கம் வகிப்பார்கள்.
இந்த குழுவே, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் விவகாரத்தையும் கவனிக்கும். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நால்வரிடமும் பகிர்ந்தளிக்கப்படும். பொதுத்தேர்தலின் முடிவில், நால்வரின் செயற்பாடும் கவனிக்கப்பட்டு, சிறப்பாக செயற்பட்டவரிடம் தலைமைப் பதவியை வழங்குவதென தீர்மானித்துள்ளார்.
தனது திட்டத்தை கட்சியின் பிரமுகர்களிடம் அவர் தெரியப்படுத்தியுள்ளார்