வாசுதேவவை சபாநாயகராக்க திட்டம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 21, 2019

வாசுதேவவை சபாநாயகராக்க திட்டம்?

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்ததும், பிரதமர் பதவியையும் கைப்பற்றி இடைக்கால அரசாங்கத்தை ராஜபக்ச தரப்பினர் அமைத்துள்ளனர். இதன் அடுத்த கட்டமாக, நாடாளுமன்ற சபாநாயகர் பதவியிலும் மாற்றம் செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவை சபாநாயகராக்குவதற்கான தீவிர ஆலோசனைகள் பெரமுன வட்டாரத்தில் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாளை பதவியேற்கும் இடைக்கால அரசில், தேசிய நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சை வாசுதேவ ஏற்பார் என தெரிவிக்கப்படுகிறது