மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையின் பிரதமராக மஹிந்த பதவியேற்கும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.