இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் நாளை பதவியேற்கின்றனர்.
இதேவேளை, இன்று மாலை 5 மணிக்கு அவசரமாக கூடும், தற்போதைய அமைச்சரவை, தானாகவே கலையும் அறிவித்தலை விடுக்கும் என தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதை தொடர்ந்து, நாளை அவர் ஜனாதிபதியாக பதவியேற்கிறார். அதேவேளை, நாளைய தினமே மஹிந்த ராஜபக்சவிற்கும் பிரதமர் பதவியை வழங்க தீவிர ஏற்பாடுகள் நடைபெறுவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
நாளை பதவியேற்கும் புதிய அரசாங்கத்தை குழப்பாமல் இருப்பதென ஐ.தே.கவும், கூட்டணி கட்சிகளும் கொள்கையளவில் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்த மூன்று மாதங்களிற்கு சுதந்திரக்கட்சியுடன் இணைந்து சிறுபான்மை அரசாக, அந்த அரசாங்கம் பதவிவகித்து, பொதுத்தேர்தலிற்கு இரண்டு தரப்பும் செல்லும்.
இன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவை அவசரமாக கூடுகிறது. இன்றையதினமே, அமைச்சரவை கலையும் முடிவை அறிவிக்குமென தெரிகிறது.