கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் தமிழ் மக்கள் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
காரைதீவு கல்முனை பகுதியில் உள்ள தமிழ் மக்கள் வெற்றியை கொண்டாடும் முகமாக இனிப்புப்பொருட்கள் வீதியில் சென்றவர்களுக்கு வழங்கியும் பட்டாசு கொளுத்தியும் கொண்டாடி வருகின்றனர்.
இப்பகுதியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டு காணப்பட்டதுடன் பொதுஜன பெரமுனவின் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் இவ்வெற்றி கொண்டாட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.