நீங்கள் எனக்கு வாக்களிக்காது விட்டாலும் உங்களுக்கும் நான் தான் ஜனாதிபதி என்று கூறி இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதாகவும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.