கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரத்தை இரத்து செய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பாக விவாதித்து அதன் எதிர்காலம் குறித்து முடிவு செய்வோம் என கூறினார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் சிரமங்களுக்கு உட்படும் விதமான நடவடிக்கைகளை தற்போதைய அரசு முன்னெடுக்காது எனவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இந்த எரிபொருள் விலை சூத்திரத்தை ஆதரிக்கவில்லை என தெரிவித்த அமைச்சர் இது பெரும்பாலும் இரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.
சர்வதேச எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்த சூத்திரத்தை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.