வவுனியாவில் மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தலுக்கு வருமாறு பிரைஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.
வவுனியா நகரசபையின் உள்ளக மண்டபத்தில் நாளை மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பிரஜைகள் குழுவின் வவுனியா மாவட்ட தலைவர் கோ.ராஜ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
காணாமலாக்கப்பட்டவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படாத நிலையில், வவுனியா நகரத்தில் இடம்பெறும் குறித்த நினைவேந்தல் எழுச்சியில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துமாறும் அழைக்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.