ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை – கோட்டாபய - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 3, 2019

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை – கோட்டாபய

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் தனது நிர்வாகத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வத்தளையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச புலனாய்வுப் பிரிவினர், இலங்கையில் இந்த தினத்தில் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுத்தும் இந்த அரசாங்கம் அதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இதனால்தான் இந்த இழப்பை நாம் எதிர்க்கொண்டுள்ளோம். நாம் அன்று முன்னெடுத்திருந்த பாதுகாப்புக் கட்டமைப்புக்களை அப்படியே கொண்டுசெல்லாதமைத்தான் இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறது.

இதற்கு ஒட்டுமொத்த அமைச்சரவையும் நிச்சயமாக பதில் கூறியே ஆகவேண்டும். நாம் வெற்றிப் பெற்றவுடன், நாட்டில் மீண்டும் பாதுகாப்பை பலப்படுத்துவோம்.

எமது ஆட்சியில் எந்தவொரு தீவிரவாதிக்கும் அடிப்படைவாதிக்கும் அனுமதி கிடையாது என்பதை இவ்வேளையில் நான் மக்களிடம் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

மேலும், இந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எமது காலத்தில் நிச்சயமாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படும் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். அனைவரையும் நாம் கைதுசெய்து சட்டத்தை நிலைநாட்டுவோம்” என மேலும் தெரிவித்தார்.