மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரித்தமையாலேயே போதைப்பொருளுக்கு அடிமையானார்களாம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 3, 2019

மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரித்தமையாலேயே போதைப்பொருளுக்கு அடிமையானார்களாம்

சிறிலங்காவில் வாழ்க்கைச் சுமை அதிகரித்தமையாலேயே நடுத்தர மக்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கும் போதைப்பொருள் பாவனைக்கும் அடிமையாகியுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். 


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பண்டாரகமவில் இன்று (03) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனது தம்பியான கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி ஆவார் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் 17 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கும் பாவனைக்கும் அடிமையாகியுள்ளார்கள். இதற்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். மக்களின் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கும்போது வாழ்வதற்காக நடுத்தர மக்கள் தவறான வியாபாரங்களை நாடுகின்றனர். 

எனவே நவம்பர் 17 ஆம் திகதிக்கு பின்னர்  போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும், போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சிறந்ததது. 

தேசிய  பாதுகாப்பும் சட்டம் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும். வீழ்ச்சியடைந்துள்ள கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும். – எனவும் அவர் கூறினார்.