நாளை கோத்தபாய பதவியேற்பு? ரணில் பதவி விலகல்? பிரதமராக தினேஸ்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 17, 2019

நாளை கோத்தபாய பதவியேற்பு? ரணில் பதவி விலகல்? பிரதமராக தினேஸ்?

நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்தநாள் அன்று காலை 7 மணிக்கு புதிய ஜனாதிபதியாக அனுராதபுரத்தில் கோத்தபாய ராஜபக்‌ஷ பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசு பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை 5 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், மக்களின் ஆணையை ஏற்றுக் கொண்டு பதவி விலகும் முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் தானாகவே கலைக்கப்பட்டதாகி விடும்.

நாளை ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் புதிய அமைச்சரவையை கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார்.

இந்த நிலையில், புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தனவை நியமிக்குமாறு விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது