
வடதமிழீழம்: கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து பிரதான பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
நான்கு மாவீரர்களின் தந்தையான வைத்தியலிங்கம் சண்முகம் பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.
தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்க விடப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளன. இதன்போது, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.