கல்லூரி மாணவனைச் சுட்டுக் கொன்ற நண்பன் நீதிமன்றத்தில் சரண்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 6, 2019

கல்லூரி மாணவனைச் சுட்டுக் கொன்ற நண்பன் நீதிமன்றத்தில் சரண்!

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே முகேஷ் என்ற கல்லூரி மாணவன் தனது நண்பன் விஜய் வீட்டிற்கு கேம் விளையாடச் சென்றான். கேம் விளையாடுவதில் தகராறு ஏற்பட்டதால் விஜய், முகேஷை துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுள்ளார். முகேஷை சுட்டவுடன் விஜய் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்த விஜய்யின் அண்ணன் உதயா, ரத்த வெள்ளத்துடன் கீழே கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

அதன் பின்பு, முகேஷை வீட்டின் அருகிலிருந்தோர் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், முகேஷை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முகேஷ் நேற்று உயிரிழந்தான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, விஜய்யின் அண்ணன் உதயாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், விஜய்யை காவல்துறையினர் வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில், விஜய் செங்கல்பட்டு நீதி மன்றத்தில் சரண் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.