ஜனாதிபதி மாளிகை முன்பாக போராட்டத்தை ஆரம்பித்தார் சிவாஜிலிங்கம்! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, November 6, 2019

ஜனாதிபதி மாளிகை முன்பாக போராட்டத்தை ஆரம்பித்தார் சிவாஜிலிங்கம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கொழும்பில் ஜனாதிபதி மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அரசியல்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட போவதாக சிவாஜி ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.