சம்பந்தன் விரைவு:கூட்டமைப்பு முடிவு அறிவிப்பு? - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, November 3, 2019

சம்பந்தன் விரைவு:கூட்டமைப்பு முடிவு அறிவிப்பு?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கான கூட்டமைப்பின் ஆதரவை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது தொடர்பிலான முக்கிய சந்திப்பொன்று ரணிலுக்கும் கூட்டமைப்பு தலைமைக்குமிடையே இன்றிரவு நடந்துள்ளது.


தமிழரசுக்கட்சி உள்ளுராட்சி தலைவர்கள் நேற்றையதினம் மாவை சகிதம் நடைபெற்ற சந்திப்பில்  சஜித்திற்கான தமது ஆதரவை வெளிப்படுத்திவிட்டனர்.

இந்நிலையில் தலைமையின் நிலைப்பாடும் அதுவாகவே உள்ள போதும் பல்கலைக்கழக மாணவர்களது 13 அம்சக்கோரிக்கை விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களாலும் நிபந்தனை அற்ற ஆதரவு தொடர்பில் சுரேஸ் உள்ளிட்டவர்கள் எழுப்பிவரும் சர்ச்சைகளால் இழுபறி நிலை தோன்றியுள்ளது.

இந்நிலையிலேயே இன்றிரவு யாழ்.நகரிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் இரவு விருந்துடன் ரணில் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்திற்கு அவசர அவசரமாக வரும் சம்பந்தன் இறுதி முடிவை அறிவிக்கவுள்ளார்.