நாடளாவிய ரீதியில் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் இதுவரையிலான காலப்பகுதியில் கிளிநொச்சியில் 30% வாக்குப்பதிவுகளும் காலியில் 25% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், குருணாகலில் 30-35% வரையிலான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை நுவரெலியாவில் 40% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் களுத்துறையில் 20% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வவுனியாவில் 25% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள அதேவேளை, இரத்தினபுரியில் 40% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல மட்டக்களப்பு மாவட்டத்தில் 19% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
கம்பஹாவில் 30% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள அதேவேளை, கண்டியில் 30%, வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளன. அதேபோல மொனராகலையில் 45% வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளன.
அநுராதபுரத்தில் 30%, வாக்குப்பதிவுகளும் பொலநறுவையில் 20% வாக்குப் பதிவுகளும், மன்னாரில் 30% வாக்குப்பதிவுகளும் புத்தளத்தில் 40% வாக்குப்பதிவுகளும் மாத்தறையில் 30% வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.