சஜித் பிரேமதாசவிற்கே நான் வாக்களித்தேன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 15, 2019

சஜித் பிரேமதாசவிற்கே நான் வாக்களித்தேன்

2019ம் ஆண்டு சனாதிபதி தேர்தலிற்கான வாக்களிப்புகள் இடம்பெற்பெற்று வருகின்றன. இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் 89538 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 100 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றது. இன்று காலை 9 மணிவரை 20 வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கிளிநாச்சி தேர்வத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவிக்கின்றார். தொடர்ந்தும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். மக்கள் தேர்தலில் பெருமளவு ஆர்வம் காட்டாத போதிலும் தொடர்ந்தும் வருகைதந்தவண்ணம் உள்ளனர்.

முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினை செலுத்தினார். தனது வாக்கினை செலுத்திய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர், மக்களை புாட்டியிடும் அசியல் கட்சிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும் ஏமாற்றியுள்ளனர். அதனால் மக்கள் இம்முறை தேர்தலில் பெரும் ஆர்வத்தை காட்டவில்லை.என தெரிவித்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனர் ஆரம்ப வித்தியாலயத்தில் தனது வாக்கினை செலுத்தினார். தொடரந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர், தாம் வாக்களிக்க கூறி மக்களிடம் காண்பித்த அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவிற்கு தான் வாக்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

துவரை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் இடம்பெற்ற வருகின்றது