மட்டக்களப்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டிலிருந்த முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – செங்கலடி, முறகொட்டான்சேனைப் பகுதியில் நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.