கிளிநொச்சி – முறிப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்றும் கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.
பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இராசரத்தினம் சந்திரகுமார் (வயது -34 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.