தமிழக அரசியல்வாதிகளுக்கு நாமல் முக்கிய அறிவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 19, 2019

தமிழக அரசியல்வாதிகளுக்கு நாமல் முக்கிய அறிவிப்பு

ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தாமல் உருப்படியாக எதனையாவது செய்யுங்களென தமிழக அரசியல்வாதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நாமல் ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் தமிழக அரசியல்வாதிகள் சிலரின் அறிக்கைகளை பார்த்தேன்.

அதில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை தவிர  அவற்றில் வேறெதுவும் இல்லை.

மேலும் எமது மக்களிடையே பகையையும் துவேசத்தையும் தூண்டிவிடும் மூன்றாம்தர அரசியலை தவிர, வேறு என்ன ஆக்கப்பூர்வமாக விடயத்தை செய்துள்ளீர்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.

எனவே, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவதை தவிர்த்துக்கொண்டு மக்களுக்காக உருப்படியாக எதையாவது செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.