கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தனது சபதத்தில் வெற்றியடைந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தனது தாடியை அகற்றிய சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹபரதுவ பிரதேசசபையின் உறுப்பினர் கபில புஷ்பகுமார என்பவரே நான்கு மாதங்களாக வளர்த்த தாடியை அகற்றினார்.
பெரமுன கட்சிக்காரரான இவர், கோட்டாபய ராஜபக்ச வெற்றியடைந்தால் மாத்திரமே இனி தாடியை மழிப்பேன், அல்லது வாழ்நாள் முழுவதும் தாடி வளர்ப்பேன் என சபதம் செய்திருந்தார்.
ஹபரதுவ பிரதேசசபையில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த சபதத்தை மேற்கொண்டிருந்தார்.
தேர்தலில் கோட்டாபய வெற்றியடைந்த பின்னர், பொதுமக்கள் முன்னிலையில் தனது தாடியை மழித்துள்ளார்.