சட்டவிரோதமாக மாட்டை இறைச்சியாக்கி விற்பனைக்கு முயன்ற இருவர் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 29, 2019

சட்டவிரோதமாக மாட்டை இறைச்சியாக்கி விற்பனைக்கு முயன்ற இருவர் கைது

வவுனியாவில் இன்று காலை 5மணியளவில் சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் மாடு வெட்டி அந்த இறைச்சியை விற்பனை செய்வதற்கு முயன்றபோது சம்பவ இடத்தில் வைத்து சந்தேகநபர் இருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதீனாநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் வெட்டி விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் குறித்த பகுதியைச்சுற்றிவளைத்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோதமான முறையில் மாடு வெட்டிய சந்தேகநபர் இருவருடன் பெருமளவு இறைச்சியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மாடு வெட்டி விற்பனை செய்யப்பட்டு வருவதும் தற்போது பொலிஸாருக்குத் தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.