திருவலைக்கட்டையால் கணவன் மீது மனைவி தாக்குதல் மேற்கொண்டதில் முன்னாள் போராளியான கணவன் உயிரிழப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 29, 2019

திருவலைக்கட்டையால் கணவன் மீது மனைவி தாக்குதல் மேற்கொண்டதில் முன்னாள் போராளியான கணவன் உயிரிழப்பு!

குடும்ப தகராறு காரணமான கணவன் மீது மனைவி தேங்காய் திருவும் திருவலைக் கட்டையால் தாக்குதலில் கணவன் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (28) இரவு மட்டக்களப்பு  கிரான் கோரக்களிமடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் மனைவியை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கிரான் கோரக்களிமடு முருகன்கோவில் வீதியைச் சேர்ந்த முன்னாள் போராளியான 49 வயதுடைய கூலித்தொழிலாளியான 2 பிள்ளைகளின் தந்தையான  பிள்ளையான் பாலசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் 
குறித்த பிரதேசத்தை சோந்த கணவன் மனைவிக்குள் சம்பவதினமான நேற்று இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட சண்டை காரணமாக மனைவி திருவலைக்கட்டையினால் கணவன் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதேவேளை குறித்த தாக்குதலை மேற்கொண்டார் என சந்தேகத்தில் மனைவியை பொலிசார் கைது செய்ததுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் ஒப்படடைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.